மொபைல் கேம்களைப் பயன்படுத்தி இனி ஆட்டிசம் பாதிப்பைக் கண்டறிய முடியும்

Must read

 
குழந்தைகளை  மொபைல் கேம் விளையாட வைத்து அவர்கள் விளையாடும் முறையை கண்காணித்து அதன்மூலம்  ஆட்டிசம் பாதிப்பை கண்டறியும் எளிய முறையை இங்கிலாந்தின் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
autiosm
ஆட்டிசம் என்பது மூளை நரம்பு செல்களில் ஏற்படும் ஒரு பாதிப்பாகும். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் சரியாக பேச முடியாது. இயல்பான மற்ற குழந்தைகளைப் போல இல்லாமல் தங்களுக்கென்று ஒரு உலகத்தை உருவாக்கி அதில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். தமிழில் வெளிவந்த ஹரிதாஸ் படமும், இந்தியில் வெளிவந்த தாரே ஜமீன்பர் படமும் ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வைச் சொன்ன படங்களாகும்.
ஆட்டிசம் பாதிப்பை கண்டறிவதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் இங்கிலாந்தில் உள்ள ஸ்ராத்க்ளைட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்த இந்த வழிமுறை எளியதும், மிகவும் துல்லியதுமானதும், விரைவானதும் ஆகும். மேலும் மிகக் குறைவான கட்டணத்தில் இப்பரிசோதனையை செய்து முடித்துவிடலாம்.  இம்முறையில் குழந்தைகள் மொபைல் கேம் விளையாடும்போது கைகளை எப்படி அசைக்கிறார்கள், விரல்களை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்று கண்டறிந்து ஆட்டிசம் பாதிப்பை உறுதி செய்வார்கள்.
இப்பரிசோதனை முறையை கண்டறிந்தது ஒரு மாபெரும் சாதனை என்று இத்துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வர்ணிக்கின்றனர்.
இங்கிலாந்தில் மட்டும் ஏழு லட்சம் பேர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

More articles

Latest article