தீவிர சிகிச்சை: காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி நினைவிழந்தார்!

Must read

விஜயவாடா:
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வயது 81.
ஆன்மிக சுற்றுப்பயணமாக விஜயவாடா சென்ற அவர் அங்கு தங்கி இருந்தார்.  வழக்கம் போல் காலையில் எழுந்திருக்காமல் இருந்ததால், சீடர்கள் அவரை தேடி படுக்கையறைக்கு சென்றனர். அங்கு  படுக்கையில் ஜெயேந்திரர் மயக்கத்துடன் கிடந்தை பார்த்தும், உடனே அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்  உடலில் சர்க்கரை அளவு குறைந்ததால் நினைவு இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஞ்சி மடத்தின் 69-வது பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி விஜயவாடா மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஜெயேந்திரருக்கு ரத்தம் அழுத்தம் மற்றும் சோடியம் அளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக நினைவிழந்த நிலையிலேயே சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
jeyendrar 600 1

More articles

Latest article