தோகா:
ர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை கடும் வீழ்ச்சி கண்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை சரி செய்ய கத்தார் அரசு, விமான பயணிகளிடம் கூடுதல் வரி (எக்சிட்)  வசூலிக்க முடிவு செய்துள்ளது.
கத்தார் தோகா விமான நிலையம்
அதன்படி இவ்வாரம் முதல்  ஒவ்வொரு பயணச்சீட்டுடனும்  எக்சிட் வரியாக 35 ரியால்களை (ரூ.644/-) கூடுதலாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
எண்ணெய் வளம் கொழிக்கும் கத்தார் நாடு சமீபத்தில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலைச் சரிவால் சற்றே ஆடிப்போய் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த ஆண்டு முதல் இனிவரும் சில ஆண்டுகளுக்கு பட்ஜெட் பற்றாக்குறை பட்ஜெட்டாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் சரிவுப்பாதயில் பயணிக்கும் இவ்வேளையில் 2022-ஆம் ஆண்டின் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை சீரும் சிறப்புமாக நடத்திக் காட்ட வேண்டிய சவாலை அந்நாடு எதிர்நோக்கியுள்ளது.