இயக்குனர் சுசீந்திரனின் தாயார் காலமானார்….!

Must read

கடந்த 2009-ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிகுழு படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன்.

பல வெற்றி படங்களை இயக்கியுள்ள சுசீந்திரன் நடிகர் சிம்புவை வைத்து எடுத்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக நேற்று திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்நிலையில் சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஒட்டன்சத்திரத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்து சிகிச்சை பலனின்றி இன்று காலை 11 மணிக்கு காலமானார்.

அவருக்கு வயது 62. சுசீந்திரனின் தம்பி சரவணன் தந்தை நல்லுசாமியின் பெயரில் நல்லுசாமி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். சுசீந்திரனுக்கு சரவணன் தவிர்த்து மேலும் ஒரு சகோதரரும், சகோதரியும் இருக்கிறார்கள்.

 

More articles

Latest article