ராமமோகன ராவ் வீட்டில் சோதனையிட துணை ராணுவத்தை பயன்படுத்தியது தவறு: எஸ்ஆர்பி கண்டனம்
சென்னை:
ராமமோகனராவ் வீட்டில் சோதனை நடத்திய போது துணை ராணுவத்தை பயன்படுத்தியது தவறு என்று அ.தி.மு.க எம்.பி எஸ்.ஆர்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்திய போது பாதுகாப்புக்கு துணை ராணுவத்தை மட்டும் அழைத்துச் சென்றது தவறு. தலைமை செயலகத்தில் சோதனை செய்யும் முன் மாநில அரசின் அனுமதி பெறுவது மரபு. தலைமைச்செயலகத்தில் நடந்த சோதனை கூட்டாட்சி தத்துவம் மீது கேள்வி எழுகிறது. வருமான வரி சோதனைக்கு துணை ராணுவம் அனுப்பியது கடும் கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.