வாஷிங்டன்,
மெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டு இந்தியர்கள் செனட் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.
பரபரப்பாக நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளின்டனே வெற்றி பெறுவார் என கருத்து கணிப்புகள், டிஸ்க்வில்லி தேர்தல் முடிவுகள் தெரிவித்துள்ள நிலையில், மக்களின் தீர்ப்பு வேறு விதமாக மாறியுள்ளது.
டொனால்ட் டிரம்ப் 276 இடங்களை கைப்பற்றி, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்த தேர்தலில் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர்கள் செனட் உறுப்பினராக தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களில் இரண்டு பேர் தேர்வு பெற்று சாதனை படைத்து  உள்ளனர்.
முதல் முறையாக ஒரு தமிழர் உள்பட இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு பேர் வெற்றி பெற்றுள்ளது வரலாற்று சாதனையாகும்.

கமலா ஹாரிஷ்
கமலா ஹாரிஷ்

செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளியினர் என்ற பெருமையை கலீபோர்னிய மாகானத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கமலா ஹரிஷ் பெற்றுள்ளார்,
அமெரிக்க ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டவர் கமலா. பிரபல வழக்கறிஞரான கமலா அமெரிக்க செனட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலாவது அட்டர்னி ஜெனரல் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜா கிருஷ்ணமூர்த்தி
ராஜா கிருஷ்ணமூர்த்தி

அதே போல் இலினோயிஸ் மாகாணத்தில் போட்டியிட்ட தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி என்பவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட தொழிலதிபரான ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு 43 வயதே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.