வாஷிங்டன்,
மெரிக்க அதிபராக தேர்வுபெற்றுள்ள  குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப்-க்கு இந்திய பிரதமர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அமெரிக்காவின் 45வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்தவரும், பிரபல தொழிலதிபருமான டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதிய அதிபருக்கு,  இந்திய ஜனாதிபதி பிரணாப், பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து  மோடி, டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
அமெரிக்காவின் 45வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பிற்கு எனது வாழ்த்துக்கள். தேர்தல் பிரசாரத்தின் போது இந்தியா உடனான நட்புறவு குறித்து விரிவாக பேசியதற்கு நன்றி.
இந்தியா – அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவுகள் புதிய உச்சத்திற்கு செல்ல ஆக்கபூர்வமாக நாம் பணியாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.