ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை அமெரிக்கா பாதுகாக்கிறது!! ரஷ்யா குற்றச்சாட்டு

மாஸ்கோ:

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புகளுக்கு அமெரிக்கா பாதுகாப்பு அளிக்கிறது என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை ராணுவம் கொண்டு அரசு அடக்கி வருகிறது. இந்த சம்பவத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சிரிய அரசுடன் இணைந்து அமெரிக்கா மற்றும் கூட்டு படைகள் வான்வழி தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இதேபோன்று ரஷ்ய படையும் ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிராக தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. சிரியாவின் ஆல்பு கமல் நகரை சுற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ரஷ்ய படை வான்வழி தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. இதனை அமெரிக்க விமான படை தடுக்க முயற்சித்து உள்ளது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

உலக சமூகத்திற்காக சர்வதேச தீவிரவாதத்திற்கு எதிராக சமரசமில்லாத போரில் ஈடுபடுகிறோம் என அமெரிக்கா காட்டி கொண்டாலும், உண்மையில் அந்நாடு ஐ.எஸ். அமைப்பினருக்கு பாதுகாவலாக இருந்து வருகிறது. இதற்கு உறுதியான சான்றுகள் உள்ளன என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
English Summary
USA protects IS terrorist organization Russia's allegation