சீனாவில் இந்திய உணவு பொருட்கள் விற்பனை ஜோர்!!

பெய்ஜிங்:

சீனாவில் ஆன்லைனில் இந்திய உணவு, ஆயுர்வேத பொருட்கள் அதிகளவில் விற்பனையாகியுள்ளது.

சீனாவின் பிரபலமான வர்த்தக இணையதளமான அலிபாபா நிறுவனம் ஆண்டுதோறும் சிறப்பு சலுகை விலையில் விற்பனை செய்யும். இந்தவருடம் நடந்த விற்பனையில் பல பில்லியன் டாலர் அளவுக்கு விற்பனை நடந்துள்ளது.

செல்போன் உள்ளிட்ட பல பொருட்கள் நடந்த இந்த விற்பனையில், இந்திய பல சரக்கு பொருள், உடனடி உணவுகள், ஆயுர்வேத பொருட்கள், அமுல் எம்டிஎச் மசாதா, டாடா டீ, ஹால்டிராம், தாபர், பதஞ்சலி, இமாலயா உள்ளிட்ட நிறுவன பொருட்கள் ஆகியவையும் அதிகளவு விற்பனையாகியுள்ளது.

இந்திய உணவுகளைத் தொடர்ந்து, அலங்கார பொருட்களும் விற்றுள்ளது. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட இந்திய இனிப்பு வகைகளும் விற்பனையாகின. இவற்றை அரேபியர்கள், ஐரோப்பியர்கள், அமெரிக்கர்களும் வாங்கியுள்ளனர்.

சீனாவிற்கு அதிகளவு வெளிநாட்டினர் சுற்றுலா வருவதால், பல நாட்டு உணவுகளும் அந்நாட்டில் உள்ள உணவகங்களில் செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஓட்டல்களில் கோழிக் குழம்பு உணவு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அவை இந்திய மசாலா மற்றும் மஞ்சள் பயன்படுத்தி செய்யப்படுகின்றன. சீன பெண்களும் வீட்டில் கோழி குழம்பு செய்ய துவங்கியுள்ளனர்.
English Summary
Indian food products sales in China !!