டோக்கியோ:

இந்திய வர்த்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு விசா விதிமுறைகளை தளர்த்த ஜப்பான் முடிவு செய்துள்ளது.

இது குறித்து ஜப்பான் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,‘‘ இருநாட்டு இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் விசா நடைமுறைகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதி முறை ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி கடந்த ஒரு ஆண்டில் அதிகபட்சமாக 2 முறை ஜப்பான் சென்றவர்களுக்கு 5 ஆண்டுகள் செல்லத்தக்க மற்றும் 90 நாட்கள் ஜப்பானில் தங்கி கொள்ளும் வகையிலான புதிய விசா எடுத்து கொள்ளலாம். இந்த புதிய விதிகள் சுற்றுலா பயணிகள், வணிகர்களுக்கு உதவியாக இருக்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.