லங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் சிறுமிகள் சவுதியில் பாலியல் அடிமைகளாக விற்பனை செய்யப்படுவதாக சவுதி இளவரசிகளில் ஒருவரான அமீரா பின்த் அய்தான் பின் நயீப் அதிர்ச்சித் தகவலை  வெளியிட்டுள்ளார்.

அல்வலீத் பின் தலால் – அமீரா பின்த் அய்தான் பின் நயீப்

சவுதி அரேபியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான அல்வலீத் பின் தலால் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரின் முன்னாள் மனைவியான இளவரசி அமீரா பின்த் அய்தான் பின் நயீப் சவுதியில் பாலியல் அடிமைகளாக சிறுமிகள் விற்பனை செய்யப்படுவதாக பிரான்ஸ் நாட்டில் இருந்து வெளியாகும் இதழான லீ மொண்டெவில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர், “இலங்கை, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், ரோமானியா மற்றும் பல்கேரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த அநாதைச் சிறுமிகள்,  சவுதி அரேபியாவில் பாலியல் அடிமைகளாக விற்பனை செய்யப்படுகின்றனர். அவர்களில் வெள்ளைத் தோல் கொண்ட சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு அங்கு பெரும் கிராக்கி காணப்படுகின்றது.

மேலும், சவுதியில் பெரும் பணக்கார குடும்பங்களில் மது மற்றும் போதை மருந்துகள் தாராளமாக புழங்குகின்றன. அந்தக் குடும்பங்களுக்குள்ள செல்வாக்கு காரணமாக காவல்துறையினரும் கண்டு கொள்வதில்லை. அத்துடன்  பல்வேறு குடும்பங்கள் ஒன்றிணைந்து ஆடிப்பாடி மகிழும் கலியாட்ட  நிகழ்ச்சிகள் சவுதியில் நிறைய நடைபெறுகின்றன. அவற்றில் பாலியல் அடிமையாக விற்கப்படும் சிறுமிகளின் நடனம் அரங்கேற்றப்படுகின்றது.   சிறுமிகளை பணம் கொடுத்து வாங்கும் நபர்களின் கட்டுப்பாட்டை விட்டு அவர்கள் தப்பிக்கவே முடியாத நிலை நிலவுகிறது” என்று  இளவரசி அமீரா பின்த் அய்தான் பின் நயீப்  தெரிவித்துள்ளார்.