வாஷிங்டன்:

2050ம் ஆண்டில் குழந்தைகளை வளர்ப்பதற்காக முதியவர்கள் பலர் வேலைக்கு செல்ல வேண்டிய நிலை வரும் என்று சர்வே முடிவுகள் தெரிவித்துள்ளது.

அமெரிக்கர்கள் மற்றும் தொழிற்சாலை சார்ந்த சமூகத்தினர் முழுக்க முழுக்க பணியிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர். பொருளாதார நெருக்கடி காரணமாக குழந்தைகள் பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடும் நிலை அங்கு நிலவுகிறது.

இதனால் பிறப்பு சதவீதம் குறைந்துள்ளது. அதோடு முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சர்வே முடிவுகள் தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக 2050ம் ஆண்டில் 65 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தொழிலாளர்களாக இருப்பார்கள். அவர்கள் குழந்கைளை பராமரிக்க வேண்டிய நிலை உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 18 வயதுக்கு குறைவான குழந்தைகளை அவர்கள் வளர்த்துக் கொண்டிருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அந்த வயதிலும் வேலைபார்க்கும் பிரிவினராக இருப்பார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 20 சதவீத அமெரிக்கர்கள் பகுதி நேரமாக பணியாற்றிக் கொண்டிருப்பது தெரியவந்தது.