அமெரிக்கா: ஹூஸ்டன் நகரில் துப்பாக்கிச் சூடு : 9 பேர் காயம்!

Must read

1amrei8ca
ஹூஸ்டன்:
மெரிக்காவில், வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஒன்பது பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹ்யூஸ்டன் நகரில் உள்ள வர்த்தக வளாகத்திற்குள்   துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக சுட்டான். அதில், அங்கிருந்த பாதுகாவலர்கள் உட்பட, ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர் என்று டெக்ஸாஸ் போலிசார் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் குடியிருப்புவாசிகள் அந்த பகுதியை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சந்தேக நபரை சுட்டுக் கொன்றுவிட்டதாகவும்; அவர் ஒரு வழக்கறிஞர் என்றும் அவரின் நிறுவனம் பிரச்சனைகளில் இருந்ததாகவும் போலீஸார். தெரிவித்துள்ளனர்
போலீசார் அந்த நபரை நோக்கி சுட்டதில், அவன் மயங்கி விழுந்தான். இதையடுத்து, போலீசார், மர்ம நபரை காரில் ஏற்றி, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். எனினும், அவன், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தான்.
இதில் வேறுயாருக்கும் தொடர்பில்லை என கருதப்படுவதாக நகரின் தலைமை போலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்து, எந்த தகவலும் வெளியாகவில்லை. உயிரிழந்த நபர், பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவனா என போலீசார் விசாரிக்கின்றனர்.

More articles

Latest article