morning-news

  • தமிழகம் முழுவதும், தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்பியோர், திடீரென பின்வாங்குவதால், அக்கட்சித் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.
  • முதல்வர் ஜெயலலிதா பூரண உடல் நலத்துடன் மருத்துவர் கண்காணிப்பில் உள்ளார் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை அறிவிப்பு.
  • காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 7 நாட்களுக்கு நாள் தோறும் 6 ஆயிரம் கன அடி தண்ணீரை திறக்கவேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கர்நாடக அரசு சார்பில் நேற்று உச்சநீதிமன்ற பதிவாளரிடம் தாக்கல் செய்தார். இதனையடுத்து இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
  •  கச்சத்தீவு அருகே மீன்பிடித்த மீனவர்களை விரட்டியடித்தது இலங்கை கடற்படை
  •  சென்னையில் இருந்து கொழும்புவுக்கு விமானத்தில் கடத்தப்பட இருந்த ரூ.16 லட்சம் பறிமுதல் ஷாகுல் அமிதுவிடம் விசாரணை
  • அடுத்த 30 ஆண்டுகளில் மத்திய பிரதேசத்தின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளை மேம்படுத்த ரூ.75000 கோடிக்கும் அதிகமான பணம் செலவிட வேண்டும் என்று மத்திய பிரதேசத்தின் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மேலும், சில பகுதிகளில்சுத்தமான குடிநீர், கழிவுநீர் அமைப்பு, குறைந்த செலவில் வீடு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். ஆகவே அதில் கவனம் செலுத்தி வருகிறோம் என்றும் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
  • குமரி அருகே குடிப்போதையில் மாமனரை கொலை செய்த மருமகன் கைது.
  •  கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் விரட்டி அட்டூழியம் செய்துள்ளனர். ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்களின் 100 படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியுள்ளனர். படகு ஒன்றில் ரூ.30,000u முதல் ரூ.1 லட்சம் வரை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியுள்ளதாக விசைப்படகு மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
  • நடிகர் கஞ்சா கருப்பு குமுதம் வார இதழில் அளித்த பேட்டி சம்பந்தமாக காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் தற்போது புகார் அளித்துள்ளார்.
  •  தமாக வேட்பாளர் பட்டியல் 2 நாட்களில் வெளியிடப்படும் : ஜி.கே.வாசன்
  • இடைவிடாத கனமழை காரணமாக கர்நாடகாவின் குல்பர்கா மாவட்டம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அம்மாவட்டத்தில் விதைக்கப்பட்ட பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைந்துள்ளது.
  • ஆந்திரா மழை-யால் ஏற்பட்டுள்ள தண்டவாளம் அரிப்பால் சென்னை – ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்
  • உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நேற்று ஒரேநாளில் 4,748 பேர் வேட்பு மனுத்தாக்கல்
  • தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து திடீரென பரவிய வதந்தியால் நேற்று இரவு 8 மணியளவில் சென்னையில் தி.நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.
  • ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை இல்லம் திரும்ப கேட்டுக் கொண்டதாகவும் சமூக வலை தளங்களில் பரவிய செய்திகளால் வதந்”தீ” யாக பரவியது.
  • முதல்வர் நல்ல உடல் நலத்துடன் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் ஆரோக்கியமாக உள்ளார். எனவே வதந்திகளை நம்பவேண்டாம் என காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!
  • சத்தீஸ்கர் மாநிலம், ப்ஹுல்பக்ரி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் நக்சல்கள் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  • ஆப்பிரிக்க நாடுகளுக்கு 5 நாடுகள் சுற்றுப்பயணத்தை துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து இன்று காலை நைஜீரியாவின் அப்யூஜா விமான நிலையத்தை வந்தடைந்தத ஹமீத் அன்சாரி, நைஜீரியாவின் துணைக் குடியரசுத் தலைவர் யேமி ஓசின்பஜோவை சந்தித்தார்.
  •  மேலூரில் அருவாளை காட்டி மிரட்டி நகை கொள்ளை
  • திருப்பதி ஏழுமலையான் கோவில் இன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது (கோவில் சுத்தம் செய்யும் பனி) வருகிற 3ஆம் தேதி பிரமேட்சவம் நடைபெறுவதால் இப்பனி நடைபெற்றது
  •  உலகெங்கிலிருந்தும்,  கேலக்ஸி நோட் 7 கைப்பேசியை திரும்பப் பெறுவதில் சாம்சங் நிறுவனத்துக்கு அதிக கால அவகாசம் தேவைப்படுவதால், தென் கொரியாவில் அதன் விற்பனை மீண்டும் தொடங்குவதைத் தான்  தாமதப்படுத்தவிருப்பதாக  சாம்சங் தெரிவித்துள்ளது.
  •  முன்னாள் அதிபர் ஒருவர் தேர்தலில் போட்டியிட கூடாது என இரானின் அதி உயர் தலைவர் உத்தரவு
  •   சிந்து நதிநீர் ஒப்பந்தம் மறுபரிசீலனை கூட்டம்: ரத்தமும், தண்ணீரும் ஒன்றாக ஓட முடியாது பிரதமர் மோடி கருத்து/
  • மலைமாதேஸ்வரன் கோவிலில் வளர்ச்சித் திட்டங்கள்: முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார்
    பார்வை குறைபாட்டுக்கு மூலிகை சொட்டு மருந்து: சத்குரு கேசவானந்தசாமி ஆசிரமத்தில் அளிக்கப்பட்டது
  • அரசு நிலம், மகா கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்வோர் மீது கிரிமினல் வழக்கு: முதன்மை பொறியாளர் சித்தேகவுடா உத்தரவு
  •  கிறிஸ்தவ போதகர்கள் ஜெருசலேம் புனித பயணம்
  •  பாஜ ஆளும் மூன்று மாநகராட்சிகளில் ‘தூய்மை இந்தியா’ திட்டம் தோல்வி:அமைச்சர் ஜெயின் குற்றச்சாட்டு
  • செயல் திட்டத்தை இரண்டு நாட்களில் சமர்பிக்க வேண்டும்: வடக்கு மாநகராட்சிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்
  •  மீனவர்கள் பிரச்சினைக்கு சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் : பொன்.ராதாகிருஷ்ணன்
  • குஜராத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு உடலில் ஓவியங்களை வரைந்து கொண்ட பெண்கள்
  • சத்தீஸ்கரில் துப்பாக்கிச்சூடு: 2 நக்சல்கள் சுட்டுக் கொலை
  • நைஜீரியாவில் யேமி ஓசின்பஜோவை சந்தித்தார் ஹமீது அன்சாரி
  • மத்திய பிரதேசத்தின் நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளை மேம்படுத்த திட்டம்: சிவராஜ் சிங் சவுகான்
  • சாலையை ஆக்கிரமித்துள்ள லாரிகள்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
  • இந்தியன் பிரோஸ்டேட் கேன்சர் பவுன்டேஷன் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு
  • மாநகராட்சி மண்டல அலுவலகங்களுக்கு மக்கள் படையெடுப்பு
  • தொற்று நோய் பரப்பும் இடமான குடியிருப்பு பகுதி/ ஆமைவேகத்தில் நடைபெறும் பணியால் ஆபத்து
  •  இந்தியன் சூப்பர் லீக்: கால்பந்து வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு..
  • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபடியே அரசு அலுவல்களை ஜெயலலிதா கவனித்தார் வதந்திகளை நம்ப வேண்டாம் ஜெயலலிதா பூரண நலத்துடன் உள்ளார் அப்பல்லோ மருத்துவமனை அறிவிப்பு
  • கோவையில் இந்து முன்னணி நிர்வாகி கொலையில் கொலையாளிகளை கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்; கருணாநிதி வலியுறுத்தல்
  • முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் போட்டியிட வாய்ப்பு: திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு
    காங்கிரஸ் சார்பில் இன்று முதல் விருப்பமனு வினியோகம்: 61 மாவட்ட மேற்பார்வையாளர்கள் நியமனம்; திருநாவுக்கரசர் அறிவிப்பு‘
  • சென்னை மாநகராட்சி 200 வார்டுகளிலும் அதிமுக போட்டி: வேட்பாளர் பட்டியல் வெளியீடு
  • ஆளுங்கட்சிக்கு சாதகமாக உள்ளாட்சி தேர்தல் தேர்தல் ஆணையத்தை சாடும் ஸ்டாலின்
  • சென்னை மாநகராட்சியின் தற்போதைய கவுன்சிலர்களில்… 50 பேருக்கு சீட்டு: 115 பேருக்கு வேட்டு! செல்வாக்கு, பண பலத்தால் பலருக்கு மீண்டும் வாய்ப்பு
  •  அ.தி.மு.க., மகளிரணி நிர்வாகிகள்…புலம்பல்! தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதாக புகார்
  • உரி ராணுவ முகாம் மீது தாக்குதல்: பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் மத்திய அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை
  • காவிரி நீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் திருத்தம் கோரும் மனுவை ஏற்கக்கூடாது சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல்
  • சசிகலா புஷ்பாவை கைது செய்ய மேலும் 6 வாரங்களுக்கு தடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
  • உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. மேல்முறையீடு
  • ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கு அக்டோபர் 3–ந் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்தி வைத்தது
  •  உத்தரபிரதேசத்தில் பேரணி ராகுல் காந்தி மீது ‘காலணி’ வீசப்பட்டதால் பரபரப்பு பா.ஜனதா மீது குற்றச்சாட்டு
  • அருணாசலபிரதேச மாநிலத்திற்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது
  • சென்னை வந்த விமானத்தில் செல்போன் தீப்பிடித்தது: விமான போக்குவரத்து இயக்குனரகத்தில் சாம்சங் அதிகாரிகள் ஆஜராகி விளக்கம்
  • மத்திய போலீஸ் படை பிரிவுகளுக்கு புதிய டைரக்டர் ஜெனரல்கள் மத்திய அரசு நியமனம்
  •  மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கு: பிரசாத் புரோகித்துக்கு ஜாமீன் மறுப்பு மும்பை கோர்ட்டு உத்தரவு
  • சி.பி.ஐ. சோதனை: அதிகார துஷ்பிரயோகத்தை தடுக்கக்கோரி மனு மத்திய அரசு, சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
  • சிரியாவில் ராணுவம் வான்தாக்குதல்: அலெப்போ நகரில் 85 பேர் கொன்று குவிப்பு ஐ.நா. மற்றும் உலக நாடுகள் கடும் கண்டனம்
  • அமெரிக்காவில் மீண்டும் சம்பவம் வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு; 9 பேர் காயம் தாக்குதலில் ஈடுபட்டவர் சுட்டுக்கொலை
  • உரி தாக்குதல் சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் பாகிஸ்தான் சொல்கிறது
  • ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் மக்கள் வீதிகளில் தஞ்சம்
  • கனவை விட்டுவிடுங்கள்’ காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு சுஷ்மா எச்சரிக்கை
  • லண்டனில் சீன தூதரகம் முன்பு பலுசிஸ்தான் அமைப்பினர் போராட்டம்
  • தங்கம் விலை விவரம்
    💰💰 22 காரட் 1கி
    2978-7(-0.23%) 24 காரட் 10கி
    31850-80(-0.25%)
    வெள்ளி விலை நிலவரம்
    வெள்ளி 1 கிலோ
    50200 -700(-1.38%) பார் வெள்ளி 1 கிலோ
    46950 -610(-1.28%)
    சரக்கு பெட்­டக போக்­கு­வ­ரத்து துறையில் இந்­தியா சர்­வ­தேச வளர்ச்­சியை விஞ்­சி­யது
    ‘இந்­தி­யாவில், ரொக்கம் சாரா, ‘டிஜிட்டல்’ முறை­யி­லான பணப் பரி­வர்த்­த­னையை, மேலும் அதி­க­ரிக்க வேண்டும்’ என, கேப்­ஜெ­மினி நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையில் கூறப்­பட்டு உள்­ளது.
    பெட்­ரோ­லிய பொருட்கள் பயன்­பாடு இந்தியாவில் அதி­க­ரிக்கும்: ‘மூடிஸ்’
    ஹீரோ மோட்­டோகார்ப் நிறு­வனம் இரு­சக்­கர வாகனம் அறி­முகம்
    பிரின்டர் விற்­ப­னையில் தொய்வு; அரசு துறையில் தேவை குறைந்­தது.
  •  500–வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி அஸ்வின் சுழலில் நியூசிலாந்து வீழ்ந்தது
  • ‘அஸ்வின் விலைமதிப்புமிக்க கிரிக்கெட் வீரர்’ கேப்டன் விராட்கோலி புகழாரம்
  • இந்த சீசனில் ‘இந்தியாவில் பகல்–இரவு டெஸ்ட் போட்டி நடத்த வாய்ப்பு இல்லை’ இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் தகவல்
  • இரட்டையர் தர வரிசையில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா முதலிடத்தில் நீடிக்கிறார
  • மாண்புமிகு அம்மா அவர்களால் நேற்று அறிவிக்கபட்ட மாநகராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் வேட்பாளர்கள் அனைவரும் இன்று நன்பகல் 12.05 To 1.00 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள்.
  • பெங்களூரில் 144 தடை