வாஷிங்டன்:

அமெரிக்கா விசா பெற முந்தைய மொபைல் எண்கள், இ.மெயில், சமூக வலை தள தகவல்களை தெரிவி க்க வேண்டும் என்று புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குடியேற்ற அனுமதியின்றி அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டினர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு மூலம் 7.10 லட்சம் குடியேற்ற அனுமதி பெறவேண்டிய நபர்கள் மற்றும் குடியேற்ற அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லாத 1.40 கோடி விசா விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அளிக்கப்பட்டு வந்த தகவல்களோடு, விண்ணப்பதாரரால் கையாளப்படும் சமூக வலை தள விபரங்கள், கடந்த 5 ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி மற்றும் மொபைல் போன் நம்பர் விபரங்கள் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

மேலும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்ட இமெயில் முகவரிகள், சர்வேதச பயண விபரம், ஏதேனும் நாட்டில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தால் அதன் விபரம், விண்ணப்பதாரரின் குடும்பத்தினர் யவரேனு தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டிருத்தல் போன்ற விபரங்களை அளிக்க வேண்டும். இந்த புதிய கேள்விகள் அடங்கிய விண்ணப்ப முறைக்கு ஆட்சேபம் ஏதும் இருந்தால் 60 நாட்களுக்கும் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பயங்கரவாத கும்பல்கள் நுழைவதை தடுக்கும் வகையில் இந்த புதிய நிபந்தனைகளை அரசு எ டுத்துள்ளது. அதற்கான புதிய விசா விண்ணப்பங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன என டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது. .