ந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் கண்ணீர் விட்டு அழ…   அவருக்கு  அஸ்வின் தனது ஆறுதலை தெரிவித்துள்ளார்.

கேப் டவுனில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதம் தடையும் விதிக்கப்பட்டது. தென்ஆப்பிரிக்காவில் இருந்து உடனடியாக ஆஸ்திரேலியா சென்ற ஸ்மித், சிட்னியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தனது செயலுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்ட ஸ்மித், கதறி அழுதார். அவரால் தொடர்ச்சியாக பேச இயலவில்லை.

இந்த நிலையில் ஸ்மித் கண்ணீர் விட்டு அழுத ஸ்மித்துக்கு அஸ்வின் ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அஸ்வின் தனது ட்விட்டரில் ‘‘ஸ்மித், உலகம் உங்களை அழ வேண்டும் என்று விரும்பியது. நீங்கள் அழுது முடித்த பிறகு, அவர்கள் திருப்தியடைந்தாகவும், இதுவரை இல்லாத சந்தோசத்தை பெற்றதாகவும் உணர்வார்கள்.

அனுதாபம் என்பது வார்த்தையாக மட்டும் அல்லாமல், மக்களிடம் இருந்திருக்க வேண்டிய ஓர் உணர்வு. இந்த பிரச்சினையில் இருந்து வெளிவர கடவுள் ஸ்மித் மற்றும் பான்கிராப்ட் ஆகியோருக்கு அனைத்து வகை வலிமையையும் அளிப்பார். வார்னர் இந்த சம்பவத்தில் இருந்து போராடி வெளி வரவேண்டும். அவர்களுடைய வீரர்கள் சங்கம் அனைத்து வகை ஆதரவு அளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்’’ என்று அஸ்வின் பதிவிட்டுள்ளார்.