அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குடல் நோய் பிரச்சனை தொடர்பாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் அதிபர் பொறுப்பை தாற்காலிகமாக துணை அதிபர் கமலா ஹாரிஸிடம் ஒப்படைத்துள்ளார்.

ஜோ பைடன் ஆண்டுக்கு ஒருமுறை குடல் புற்றுநோய் சம்பந்தமான கொலொனோஸ்கோபி பரிசோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள இருக்கும் பைடனுக்கு பரிசோதனையின் போது மயக்க மருந்து கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால் அவர் மயக்கத்தில் இருந்து தெளியும் வரை தாற்காலிகமாக கமலா ஹாரிஸ் அதிபரின் பொறுப்புகளை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.