அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

இன்று மேற்கொண்ட பரிசோதனையில் பைடனுக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததாக அமெரிக்க அதிபர் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் 90 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர் அதில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் மரணமடைந்தனர்.

இந்த நிலையில் உலகின் முக்கிய அரசியல் தலைவருக்கு கொரோனா உறுதியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு டோஸ் முழுமையான தடுப்பூசி மற்றும் இரு முறை பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்ட ஜோ பைடனுக்கு லேசான அறிகுறியே உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டுள்ள பேக்ஸ்லோவிட் என்ற மருந்து அவருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.