வாஷிங்டன்:
ரும் டிசம்பரில் 2 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என தனியார் பங்களிப்புடன் கூடிய அமெரிக்க கொரோனா தடுப்பூசி அமைப்பான Operation Warp Speed தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் இதைத் தெரிவித்த அந்த அமைப்பின் தலைமை அறிவியல் ஆலோசகர் மோன்செப் சுலோய், அடுத்த ஆண்டு, ஒவ்வொரு மாதமும் குறைந்தது இரண்டரை கோடி அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.

ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் உருவாக்கி உள்ள இரண்டு தடுப்பூசிகளும் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளதாகவும், அவற்றை பயன்படுத்துவதற்கான அவசரகால அனுமதி அடுத்த மாதம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.