டமாஸ்கஸ்:

சிரியா  விமான தளம் மீது சுமார் 50க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஏற்கனவே. சிரியா நடத்திய ரசாயன  தாக்குதலுக்கு பதிலடியாக இந்த அதிரடி தாக்குதல் நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமானங்கள் செவ்வாய்கிழமையன்று ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த ரசாயன தாக்குதல் நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது. இதன் காரணமாக ஏராமானோர் பலியாகினர்.

இந்த ரசாயன தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த தாக்குதல் மிகவும்  கொடூரமானது. எந்த வகையிலும் சகித்துக் கொள்ள முடியாதது. இது எல்லை மீறிய தாக்குதல். குறிப்பாக பலியான குழந்தைகளின் புகைப்படங்கள் என்னை வெகுவாக பாதித்ததுள்ளது என்று கூறியிருந்தார்.‘

சிரியா மீதான விஷவாயு வெடிகுண்டு தாக்குதல் துளியும் மனிதநேயம் இல்லாதது என்றும் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுடன் அமெரிக்கா மற்றும் எங்கள் கூட்டணி நாடுகள் உறுதுணையாக நிற்கும்.

நடந்த இந்தச் சம்பவத்திற்கு உலகளாவிய கண்டனத்தை அமெரிக்கா பதிவு செய்கிறது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினரை முற்றிலுமாக அழித்து பொதுமக்களை பாதுகாப்பதே எங்களது தலையாய பணி எனவும் கூறினார்.

அதைத்தொடர்ந்து நேற்று 59 ஏவுகணைகளை தனது கடற்படை கப்பல் மூலம் சிரியா விமான தளம் மீது அமெரிக்கா ஏவி தாக்கியது.

கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள சிரியா கடற்படைத் தளத்திலிருந்து இந்த ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டதாக  ராணுவ அதிகாரி கூறி உள்ளார்.