வாஷிங்டன்

கொரோனா தடுப்பூசி போடாத ராணுவ வீரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா பரவல் உலகம் முழுவதும் நாளுக்கு நால் அதிகரித்து வருகிறது.  பல நாடுகளில் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமாக்க்கப்பட்டு  உள்ளது.  உலகளவில் தற்போது 38,92,42,368 பேர் பாதிக்கப்பட்டு 57.38 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.

கொரோனாவை தடுக்க அமெரிக்காவின் இராணுவ வீரர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாகியுள்ளது. குறிப்பாகப் போருக்குத் தயார் நிலையில் இருக்கும் இராணுவ வீரர்கள் கட்டாயமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராணுவ செயலாளர் கிறிஸ்டின் வோர்முத், ”ராணுவ வீரர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் மற்ற வீரர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். இது போர் தயார் நிலையை பாதிப்பு உள்ளாகும்   தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ராணுவ வீரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர்” என்று தெரிவித்துள்ளார்.