நியூயார்க்: கற்பனை நாடான வகாண்டாவை தமது சுதந்திர வர்த்தக கூட்டாளியாக அமெரிக்கா சேர்த்திருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மார்வல் யூனிவர்சின் சூப்பர் ஹீரோ படம் பிளாக் பாந்தர். முதல் கருப்பின ஹீரோ படம் என்பதால் வசூலை அள்ளியது. வகாண்டா என்ற மர்ம தேசத்தில் இருக்கும் ஹீரோவை பற்றிய கதை.
இந்த நாட்டுடன் அமெரிக்க நாட்டின் வேளாண்துறை சுதந்திர வர்த்தக கூட்டாளியாக சேர்த்திருக்கிறது. இத்தனைக்கும் இது ஒரு கற்பனை நாடாகும்.
இது தொடர்பாக அமெரிக்க வேளாண்துறை செய்தி தொடர்பாளர் கூறி இருப்பதாவது: ஆன்லைனில் எதிர்பாராத விதமாக அந்த நாட்டை தமது சுதந்திர வர்த்தக கூட்டாளியாக சேர்க்கப்பட்டது.
அது தவிர, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வாத்துகள். கழுதைகள், பசுக்கள் என வர்த்தக தொடர்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவல் அமெரிக்க ஊடகங்களில் வெகுவேகமாக பரவ, இணையதளத்தில் பதிவிடப்பட்ட அந்த தகவல் தற்போது நீக்கப்பட்டு இருக்கிறது.