ககொஷிமா

அமெரிக்க ராணுவ விமானம் ஜப்பான் நாட்டில் நொறுங்கி விழ்ந்த்தில் ஒருவர் மரணம் அடைந்து 7 பேர் காணாமல் போய் உள்ளனர்.

நேற்று மதியம் ஜப்பானின் ககோஷிமா மாகாணத்திற்கு தெற்கே அமைந்த யகுஷிமா தீவின் கடலோர பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்பிரே ரக விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த விமானம் மதியம் விபத்தில் சிக்கியது.

இது குறித்து கடலோர காவல் படைக்குப் பகல் 2.47 மணியளவில் தகவல் சென்றதைத்  தொடர்ந்து சம்பவ பகுதிக்கு ரோந்து படகு மற்றும் விமானம் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன.

ககோஷிமா விமான நிலையத்திற்கு, விமானம் அவசரக்கால தரையிறக்கம் செய்வதற்கான அழைப்பு ஒன்று அமெரிக்க ராணுவத்திடம் இருந்து சென்றுள்ளது. ஆயினும் அது அமெரிக்கக் கடற்படை அல்லது விமானப் படையிடம் இருந்து வந்த கோரிக்கையா? என அதிகாரிகள் குறிப்பிடவில்லை.

விமான விபத்தில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.  மேலும் விமானத்தில் இருந்த மற்ற 7 பேரின் நிலைமை தெரிய வரவில்லை. இந்த விபத்திற்கான காரணமும் தெரியவில்லை. தேடுதல் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.