வாஷிடன்: தெளிவான பெரும்பான்மையுடன் நாங்கள் வெற்றியின் விளிம்பில்  இருக்கிறோம் என்று குடியரசுக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் மக்களுக்கு தெரிவித்து உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற  270 தேர்தல் சபை வாக்குகள் தேவைப்படும் பட்சத்தில்,  தற்போதைய அதிபரும், குடியரசுக்கட்சி வேட்பாளருமான டிரம்ப் பின் தங்கி உள்ளார்.  இதையடுத்து வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடப்பதாக கூறி நீதிமன்றங்களை நாடி வருகிறார்.  தற்போதைய நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 264 வாக்குகளுடன் வெற்றியை நெருங்கி உள்ளார். குடியரசு கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டிரம்ப் 214 வாக்குகளுடன் பின்தங்கி உள்ளார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கடுமையான அழுத்தத்தை அடுத்து, பென்சில்வேனியாவில் உடனடியாக எண்ணுவதை நிறுத்த மறுத்த அமெரிக்க உச்சநீதிமன்றம்,   அனைத்து அஞ்சல் வாக்குகளையும் பிரித்துப் பாதுகாக்குமாறு தேர்தல் அதிகாரிகளை  கேட்டுக் கொண்டுள்ளது. தேவைப்பட்டால், அந்த வாக்குகள் தனித்தனியாக எண்ணப்படும் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி சாமுவேல் ஏ அலிட்டோ ஜூனியர் தனது உத்தரவில் தெரிவித்திருந்தார். அதையடுத்து அங்கு மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

கடும் போட்டி உள்ள பென்சில்வேனியாவில் 20 தேர்தல் சபை வாக்குகள் உள்ளன. அங்கு தற்போதைய நிலையில்,    டிரம்ப்பை விட 29,000 வாக்குகள் பெற்று ஜோ பைடன் முன்னிலை பெற்றுள்ளார். பென்சில்வேனியாவில் 99% வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் ஜோ பைடன் 29,000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். பென்சில்வேனியாவில் 20 எலக்ரோரல் வாக்குகள் உள்ளதால் ஜோ பைடன் வெற்றியை நெருங்கியுள்ளார்.

இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய  ஜோபைடன்,  இன்னும் இறுதி அறிவிப்பு வரவில்லை, வெற்றி அறிவிக்கப்படவில்லை, ஆனால் நமது எண்ணிக்கை நமக்கு தெளிவான மற்றும் உறுதியான தகவலை சொல்கின்றன. நாம் வெற்றியின் விளிம்பி உள்ளோம்.  மொத்தம் 300க்கும் மேற்பட்ட தேர்தல் சபை வாக்குகள் நமக்கு கிடைக்கும். நமக்கு 7.4 கோடிக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன. டொனால்ட் டிரம்பை விட 40 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் இருக்கிறோம் என்று உற்சாகமாக கூறினார்.

மேலும்  நாம் பென்சில்வேனியாவை வெல்லப் போகிறோம். நாம் 24 ஆண்டுகளுக்கும் மேலாக அரிசோனாவில் முதல் ஜனநாயகவாதிகளாக இருக்கப் போகிறோம். நாம் 28 ஆண்டுகளுக்கு பிறகு ஜார்ஜியாவில் முதல் ஜனநாயகவாதிகளாக இருக்கப் போகிறோம். நீலசுவரை நம் நாட்டின் நடுவே மீண்டும் கட்டியுள்ளோம். அமெரிக்கர்களின் வாக்களிப்பு ஒரு நள்ள மாற்றத்தைத் தேர்ந்தெடுத்தது என பைடன் தனது உரையின் போது தெரிவித்தார்.