அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரி – டிரம்ப் நேரடி விவாதம்!

Must read

வாஷிங்டன் :
மெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் – ஹிலாரி கிளிண்டன் இடையேயான நேரடி விவாதம் இன்று (26-09-16) இரவு நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நாளை காலை பார்க்கலாம்.
cliary-drumb-top
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம், இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க அடுத்த மாதம்  8ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதில்குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும்,  ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் போட்டியிடுகின்றனர். இரு வேட்பாளர்களும் பம்பரமாக சுழன்று ஓட்டு வேட்டையாடி வருகின்றனர்.
தேர்தல் நெருக்கி வருவதால்,  இரு கட்சிகளின் வேட்பாளர்களிடையே நேரடி விவாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று இரவு நேரடி விவாதம் நடைபெற இருக்கிறது. இந்த விவாதம்  டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகும்.
நியூயார்க்கில் உள்ள ஹாப்ஸ்ட்ரா பல்கலையில் இரண்டு வேட்பாளர்களிடையேயான  முதல் விவாத நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறுகிறது.  நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விவாதம் இந்திய நேரப்படி நாளை (செவ்வாய்கிழமை) காலை 6.30 மணிக்கு துவங்கும்.
2வது விவாதம் அக்.9ந் தேதியும், இறுதி விவாத நிகழ்ச்சி அக்.,19ம் தேதி நடைபெறவுள்ளது.

More articles

Latest article