மதிய செய்திகள்!

Must read

afternoon-news
8 செயற்கைகோளையும் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது பிஎஸ்எல்வி சி-35
அரியலூர் சாலை விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் தர முதல்வர் ஜெயலலிதா உத்தரவு அளித்துள்ளார். அரியலூர் சாலை விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதிதாக மாவட்ட பொறுப்பளர் நியமித்தார் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.சட்ட மன்றம் தேர்தல் முடித்த நிலையில் பல மாவட்ட தலைவர்கள் ராஜினாமா செய்தனர்.
தமிழகத்திற்கு 6000 கன அடி தண்ணீர்: உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா மனு
எம்.பி.யாகிறார் இல.கணேசன். மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்
ராக்கெட் என்ஜினை ஆஃப் மற்றும் ஆன் செய்யும் இயக்கம் வெற்றி: இஸ்ரோ
வடகிழக்கு பருவ மழையின்போது சென்னை மாநகரம் பாதிப்பிற்கு உள்ளாக வாய்ப்பு – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை…
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்தது கர்நாடகா
இசைக்கு நாடு கிடையாது: அமெரிக்காவில் இளையராஜா பேட்டி
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு இயந்திரத்தை பயன்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு அளித்துள்ளது. வாக்குச்சீட்டுகளை பயன்படுத்துவதால் முறைகேடுகள் நடைபெற அதிக வாய்ப்புள்ளது என்றும் வாக்கு இயந்திரத்தை  பயன்படுத்த தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் திமுக குறிப்பிட்டுள்ளது. திமுக செய்தி தொடர்பாளர் மனுசுந்தரத்தின் மனு வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ பிரதமர் மோடி வாழத்து தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் அல்மோராவில் யூத் அபியஸ் 2016 என்ற நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் அமெரிக்க படைகள் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
உத்திர பிரதேச மாநிலத்தில் 2017-ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி மூத்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் காலை 10 மணிக்கு தொடங்கியது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் கடைசி நாள் அக்டோபர் 3ம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 4ம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும்; அக்டோபர் 6ம் தேதி வேட்புமனு திருமபப்பெறப்படும். வாக்குப்பதிவு அக்டோபர் 17,19 தேதிகள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
தெற்கு ஜப்பானில் உள்ள ஷிஸுனை என்ற இடத்தில் 5.7 புள்ளி ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சில இடங்களில் கட்டிடங்கள் குலுக்கின.
துணை காவல்துறை கண்காணிப்பாளர் கணபதி தற்கொலை வழக்கில் சி.ஐ.டி மூலம் நற்சான்றிதழ் பெற்ற பிறகு கர்நாடக அமைச்சராக  கே.ஜே.ஜார்ஜ் பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.
கோவையில் சசிகுமாரை கொலை செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். கொலைக்கு சம்பந்தம் இல்லாதவர்களை இந்து முன்னணியினர் தாக்குவது விரும்பத்தக்க செயல் அல்ல என்றும் வன்முறை செயலுக்கு இடம்தராமல் உண்மை குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் காவல்துறை நிர்வாகம் சீர்கெட்டு உள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். ஹவாலா பணம் ரூ.3.9 கோடியை பரமத்தி இன்ஸ்பெக்டர் கொள்ளையடித்ததற்கு கண்டனம் தெரிவித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசு எவ்வழியோ அவ்வாறே அரசின் துறைகளும் செயல்படுவதாக கருணாநிதி கூறியுள்ளார். மேலும் சென்னை கண்ணகி நகர் காவல் நிலையத்தில் போலீசார் தாக்கி இளைஞர் கார்த்திக் உயிரிழந்ததற்கும் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு புதிய மனு தாக்கத்தால் செய்துள்ளது.  6 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவில் திருத்தம் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளது. மேலும் தமிழகத்துக்கு உத்தரவிட்ட நீர் டிசம்பரில் சேர்த்து தரப்படும் என்று கர்நாடக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது.
திருவள்ளூர் டி.டி.மருத்துவ கல்லூரி, மருத்துவமனை நிர்வாகத்தை அரசு ஏர்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ராபர்ட் கென்னடி என்பவரின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது
ராக்கெட் என்ஜினை ஆஃப் மற்றும் ஆன் செய்யும் இயக்கம் வெற்றி அடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. என்ஜின் செலுத்திய 1 மணி 22 நிமிடத்துக்கு பின் இந்த இயக்கம் வெற்றி பெற்றுள்ளது.
ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் இந்தியா சார்பில் இன்று பேசவுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு சரியான பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் தொடர் குற்ற சம்பவங்களை தடுக்க ரவுடிகள், பழைய குற்றவாளிகள், தலைமறைவு ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இரவு ரோந்து பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஸ்வீடனில் ஆடி காரில் வந்த ஒரு மர்மநபர் திடீரென ஒரு கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி கிராமத்தில் குடியிருப்புகளின் நடுவே இருந்த புளியமரத்திற்கு மர்மநபர்கள் தீவைப்பு – அச்சமடைந்த கிராம மக்கள் சாலைகளில் தஞ்சம் – தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 53.21 அடி நீர் இருப்பு 5.2 டிஎம்சி வரத்து வினாடிக்கு 90 கன அடி வெளியேற்றம் 255 கன அடி.
மும்பையில், சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோவில், வாயு கசிவு ஏற்பட்டு, ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 9 பேர் காயமடைந்தனர்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே சிந்துநதி நீரை பகிர்ந்துகொள்வது தொடர்பான ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வது குறித்து ஆலோசனை – உரி தாக்குதலையடுத்து மத்திய அரசு முடிவு
இறந்த தாயின் உடலை எரியூட்ட விறகு வாங்க முடியமால் தவித்த குடும்பம் – வீட்டின் கூரை, கட்டிலை பயன்படுத்தி சிதைக்கு தீ மூட்டிய பரிதாபம்
குஜராத் போலி என்கவுண்ட்டர் வழக்கில் இஸ்ரத் ஜகான் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனது குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற்ற இந்தியா-அமெரிக்கா கூட்டுப்பயிற்சியில், இருநாட்டு ராணுவ வீரர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்
உள்ளாட்சித் தேர்தல்: சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி போட்டியில்லை
 
 

More articles

Latest article