உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா தொடர்ந்து ராணுவதத்தைக் குவித்து வருவதாகவும், பெலாரஸ் நாட்டு ராணுவத்துடன் இணைந்து அணுஆயுத போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கூறிவருகின்றன.

அணுஆயுத போர் பயிற்சியை ரஷ்ய அதிபர் புடின் மற்றும் பெலாரஸ் அதிபர் ஆகியோர் ராணுவ தலைமையக கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்வையிடப்போவதாக அறிவிப்பு வெளியானது.

அதேவேளையில், கடந்த இரண்டு தினங்களாக உக்ரைன் எல்லையோர மாகாணங்களில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் உக்ரைன் படையினருக்கும் இடையே சண்டை மூண்டுள்ளது.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் பலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூட்டப்படுகிறது.

பெலாரஸ் அதிபருடன் ரஷ்ய அதிபர் புடின் நேற்று நடத்திய ஆலோசனையில், மேற்கத்திய நாடுகள் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி தங்கள் நாடுகள் மீது மீண்டும் பொருளாதார தடை விதிக்க காத்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

மேலும், உக்ரைன் எல்லையோர பகுதியான டன்பாஸ் நகரில் இருந்து ரஷ்யா வரும் மக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு ஆகியவற்றை வழங்க ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தவிர வெடிகுண்டு தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான மருந்து மற்றும் ரத்தம் ஆகியவற்றை போதுமான அளவு கையிருப்பு வைக்கவும் உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் அதிபர் ஸிலென்ஸ்கி

இந்நிலையில், ஜெர்மன் நாட்டின் முனிச் நகரில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தலைமையில் நடைபெற இருக்கும் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உக்ரைன் அதிபர் ஸிலென்ஸ்கி இன்று செல்வதாக கூறப்பட்டது.

உக்ரைன் நாட்டில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் மூலம் ரஷ்யா எந்த நேரத்திலும் படையெடுத்து முன்னேற வாய்ப்பிருப்பதால் அதிபர் ஸிலென்ஸ்கி உக்ரைனை விட்டு வெளியேறுவது மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தக் கூடும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் எச்சரித்துள்ளது.

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவுடன் அமெரிக்கா முக்கிய ஆலோசனை….