வோல்க்ஸ்வாகன் தொழிற்சாலை அமைந்துள்ள ஜெர்மன் நாட்டின் எம்டன் துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவின் டேவிஸ்வில்லே நகருக்கு 4000 சொகுசுக் கப்பலை ஏற்றிச் சென்ற கப்பல் தீப்பற்றி எரிந்தது.

கப்பலின் ஒருபக்கத்தில் ஆரம்பித்த தீ மளமளவென கப்பல் முழுவதும் பரவ தொடங்கியது, இதில் கடல் மட்டத்தில் இருந்து 15 அடி உயரத்தில் இருந்து கப்பலின் மேல் தளம் வரை அனைத்து பகுதியும் தீயில் நாசமானது.

தீ விபத்தைத் தொடர்ந்து இந்த கப்பலில் இருந்த 32 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அட்லாண்டிக் பெருங்கடலில் போர்ச்சுக்கலின் அசோர்ஸ் தீவுகள் அருகே நடந்த இந்த விபத்தில் ஆடி, போர்ஷ், பென்டலே உள்ளிட்ட 1200 சொகுசு கார்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

எலக்ட்ரிக் கார்களில் உள்ள பாட்டரிகளில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.