நியூயார்க்:
ந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, அமெரிக்காவுக்கான ஐ.நா., தூதராக நியமிக்கப்படுவதாக, அந்நாட்டின் புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக தற்போது செயல்பட்டு வரும் நிக்கி ஹாலே ( வயது 44). இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். குடியரசுக் கட்சியின் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் ஒருவர்.

 
சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, டொனால்டு டிரம்ப் மீது சில காட்டமான விமர்சனங்களை நிக்கி ஹாலே முன்வைத்தார். இதனால், இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் அதிபராக வெற்றி பெற்ற, டொனால்டு டிரம்ப்  வெளியுறவு அமைச்சர் பதவிக்கு யாரை தேர்வு செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அந்த பதவிக்கு நிக்கி ஹாலேவைவிட சிறந்த குடியரசுக் கட்சியில்  இல்லை  என்றும், ஆகவே நிக்கி ஹாலேவே  வெளியுறவு அமைச்சராக, நியமிக்கப்படுவார் என்று ஒரு கருத்து இருந்தது.
இந்நிலையில், நிக்கி ஹாலேவை, ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதராக நியமித்து, டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
தன்னை விமர்சிக்கக்கூடிய நபராக இருந்தாலும், அவரது செயல்பாடுகள் சர்வதேச அரங்கில் பாராட்டப்பட வேண்டியவை என, டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, செனட் ஒப்புதலைப் பெற்று, நிக்கி விரைவில் பதவியேற்பார்.
அதேசமயம், தன்னை விமர்சித்தவர் என்பதால், நிக்கியை அமைச்சரவையில் சேர்க்காமல் விலக்கி வைக்க, இந்தபதவியை ட்ரம்ப் அளித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
 
donald trump chose gov nikki haley as ambassador to the united nations