காஷ்மீர்:
காஷ்மீர் உரி ராணுவ முகாம்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் உயிழந்தனர். இந்த  உரி பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
1uri-1 இந்த தாக்குதல் ‘பின்னணியில் உள்ளவர்கள் தண்டனையை அனுபவித்தே தீருவார்கள்’ – என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரியில் இந்திய ராணுவத்தின் 12-வது படை பிரிவினருக்கான தலைமை அலுவலகத்தில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 19 பேர் காயம் அடைந்து உள்ளனர். 4 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காஷ்மீர்  ராணுவ தலைமையகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் பாதுகாப்பு துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1uri-2
இந்த தாக்குதல் குறித்து இந்திய பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், ,
“உரியில் நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். இந்த வெறுக்கத்தக்க தாக்குதலுக்கு பின்னால் உள்ளவர்களை தண்டிக்காமல் விடமாட்டோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கின்றேன். உரி தாக்குதலுக்கு உயிர்நீத்த தியாகிகளுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். நாட்டிற்கான அவர்களுடைய சேவை எப்போதும் நினைவில் இருக்கும். என்னுடைய எண்ணங்கள் முழுவதும் அவருடைய குடும்பங்களுடன் உள்ளது”  என்று குறிப்பிட்டுள்ளார்.