சென்னை: தமிழ்நாட்டில் வரும் 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிகை 22ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், வாக்குகளை எண்ண 268 மையங்களில் தயார் செய்யப்பட்டு வருவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தவிர) என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு  வரும் 19ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  வாக்குப்பதிவு அன்று பதிவாகும் வாக்குகள் 22.02:2022 செவ்வாய்கிழமை அன்று  268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என்றும், இது தொடர்பான தகவல் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது என தமிழக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

வாக்கு எண்ணும் இடங்கள் – முழு விவரம்:

PR-0042-2022-Counting Place Details