சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர்களுடன் மாநிலத் தேர்தல் ஆணையர் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வரும் பிப்ரவரி மாதம் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து நேற்று முதல் மாநிலம் முழுவதும்  தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்‍கு வந்துள்ளன. அதைத்தொடர்ந்து வழிகாட்டுதல் நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது, தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவது குறித்து, மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார், காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். மாநகராட்சி ஆணையர்கள், காவல் ஆணையாளர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தேர்தல் பணிகள், வாக்காளர்களுக்கு இலவசம் வழங்குவதை தடுப்பது, கண்காணிப்பு பணிகள், பாதுகாப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார்.