சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரு ஓட்டு வாங்கி பாஜவின் சாதனை படைத்துள்ளது. அதே வேளையில் ஒரு ஓட்டை கூட பெறாமல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

நண்பகல் 12 மணி நிலவரப்படி ஒட்டு மொத்தமாக பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 2003 இடங்களில் திமுக வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. 441 இடங்களில் அதிமுகவும், 594 இடங்களில் பிற கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சியில் 11 வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர், நரேந்திரன் ஒரே ஒரு ஓட்டு மற்றும் பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.

நரேந்திரனுக்கு பாஜக வேட்பாளரின் ஓட்டை தவிர அவரது குடும்பத்தினரோ, நண்பரோ கூட வாக்களிக்காத சோகம் நிகழ்ந்துள்ளது.

அதுபோல, சிவகங்கை நகராட்சி 1வது வார்டில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செங்கோல் என்பவர் ஒரு வாக்கு கூட பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.