சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 13 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட பல அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச்செயலாளர் இறையன்பு வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. அதையடுத்து, வேட்புமனு தாக்கல் : ஜனவரி 28ந்தேதி தொடங்கி பிப்ரவரி 4ந்தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 5ந்தேதி வேட்பு மனு பரிசீலனையும், பிப்ரவரி 7ந்தேதி வேட்புமனு வாபஸ் பெறும் நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதையடுத்து பிப்ரவரி 19ந்தேதிவ க்குப்பதிவு நடைபெற்று பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

தேர்தல் பணிகள், வாக்குச்சாவடிகள் அமைப்பு உள்பட தேவையான நடவடிக்கைகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், தேர்தல் பார்வையாளர்களையும் நியமித்து வருகிறது.

அதன்படி 13 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளது. மேலும், 20 மாவட்ட வருவாய் அலுவலர்கள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.