பிரேலி:

தற்போது முஸ்லிம் சமுதாய மக்களால் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அதிகாலையில் நோன்பு தொடங்கும். இதற்காக முஸ்லிம் மக்களை தூக்கத்தில் இருந்து எழுப்பி வி டுவதற்காக மசூதிகளில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிகாலை 3 மணிக்கு அறிவிப்புகள் வெளியிடப்படும். இதை கேட்டு அவர்கள் எழுந்து நோன்புக்கு தயாராவார்கள்.

இவ்வாறு உ.பி மாநிலம் பிரேலி பிரேம் நகர் பகுதியில் 7 மசூதிகளில் அதிகாலையில் ஒலிபரப்பப்படும் அறிவிப்புக்கு எதிராக அப்பகுதியை சேர்ந்த இந்து மக்களும், சில முஸ்லிம்களும் புகார் கொடுத்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்ட இந்த புகாரை தொடர்ந்து மசூதிகளில் அதிகாலை நேரங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என்றும், அவற்றை அணைத்து வைக்க வேண்டும் என்று உத்தரவிட ம £வட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சப் கலெக்டர் அலோக் குமார் கூறுகையில்,‘‘ இது குறித்து விசாரணை நடத்த எஸ்.பி.க்கு உத்தரவிடப்பட் டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது என்று உ ச்சநீதிமன்றம் வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்துள்ளது. மத வழிபாட்டு தளங்களில் உள்ள ஒலிபெரு க்கிகளுக்கும் இது பொருந்தும்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகள் பயன்ப டுத்துவதால் மனிதனின் அமைதி தூக்க உரிமை பறிக்கப்படுகிறது என்றும், தூக்கத்தில் தொந்தரவு செய்வது மனித உரிமை மீறல் என்றும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

குடியிருப்பு வாசிகள் கடந்த வாரமே இது தொடர்பான புகாரை மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துள்ளனர். சமாஜ்வாடி கட்சியின் வர்த்தக பிரிவும் குடியிருப்புவாசிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் சோபித் சக்சேனா கூறுகையில்,‘‘கோவில் அல்லது மசூதி என எந்த மதமாக இருந்தாலும் அடுத்தவர்களை துன்புறுத்தக் கூடாது. எனது தந்தை ஒரு இருதய நோயாளி. அறுவை சிகிச்சை செய்துள்ளார். எனது 73 வயதாகும் தாய் இரவில் அமைதியாக தூங்க வேண் டும். அனைத்து வீடுகளிலும் குழந்தைகள் உள்ளது. அவர்களின் தூக்கம் முக்கியமானது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில்,‘‘ இந்துக்கள் மட்டுமல்ல அந்த குடியிருப்பு பகுதியை சேர்ந்த 7 முஸ்லிம் கு டும்பத்தினரும் இந்த புகாரை தெரிவித்துள்ளனர். அவர்கள் ரம்ஜான் என்பது மற்றவர்களுக்கு உதவி செய்ய கூடிய பண்டிகையாகும். அதனால் மற்றவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்’’ என்றார்.

புகார் அளித்த ஆசிப் பெக் என்பவர் கூறுகையில்,‘‘ நான் வீட்டிற்கு வந்த போது மசூதி அருகே என்னை தடுத்து நிறுத்தி சிலர் தாக்கினர். மசூதி ஒலிபெருக்கி தொடர்பாக நான் புகார் அளித்ததால் என்னை தாக்கியுள்ளனர்’’ என்றார்.

பிரேலி துணை மவுலானா சகாபுதீன் கூறுகையில்,‘‘ காலையில் முஸ்லிம்களை எழுப்ப ஒலிபெருக்கி பயன்படுத்துவது தவறு தான். குறிப்பிட்ட பகுதிக்கு ஒரு முறை அழைப்பு விடுத்தால் போதுமானது. சிலர் பதிவு செய்யப்பட்ட அறிவிப்புகளை திரும்ப திரும்ப வெளியிடுவதால் பிரச்னை ஏற்படுகிறது. இது ரம்ஜான் கோட்பாடுக்கு எதிரானதாகும்’’ என்றார்.