க்னோ

னியார் பல்கலைக்கழகங்கள் தேச விரோத செயல்களில் ஈடுபட மாட்டோம் என உறுதி மொழி அளிக்க வேண்டும் என உத்திரப் பிரதேச அரசு உத்தரவிட உள்ளது.

உத்திரப் பிரதேசத்தில் தற்போது 27 தனியார் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஒரு சில பல்கலைக் கழகங்களில் தேச விரோத நடவடிக்கைகளில் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது. அத்துடன் இந்த பல்கலைக்கழகங்கள் எவ்வித விதிமுறைகளின் கீழும் வராமல் இருந்து வருகின்றன. இதை கட்டுப்படுத்த அரசு எண்ணி உள்ளது.

உத்திரப் பிரதேச மாநில சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் ஜூலை 18 முதல் தொடங்க உள்ள்து. அந்த கூட்டத்தொடரில் தனியார் பல்கலைக்கழகங்களை ஒழுங்கு படுத்தும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த மசோதா விரைவில் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக்கப்பட உள்ளது. இந்த மசோதாவில் தேசிய ஒற்றுமை, மதசார்பின்மை, சமூகநீதி, உள்ளிட்டவைகள் குறித்த விதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இனி இந்த சட்டத்தின்படி ஏற்கனவே இயங்கும் மற்றும் இனி தொடங்க உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் எனவும் அதற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் எனவும் உறுதி அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி துணை வேந்தர் உள்ளிட்ட அனைவரும் அரசு குறித்துள்ள விதிகளின்ப்டி நியமனம் செய்யப்பட வேண்டும் எனவும் விதிகளில் உள்ளன.

அத்துடன் பல்கலைக் கழகத்துக்கு சொந்தமான நிலங்களை விற்கவோ, மற்றவர்களுக்கு மாற்றவோ, லீசுக்கு விடவோ அல்லது அடமானம் வைக்கவோ கூடாது என விதிகல்தெரிவிக்கின்றன. மொத்தமுள்ள ஆசிரியர்களில் 75% பேர் நிரந்தர நியமன ஊழியர்களாக இருத்தல் வேண்டும் என்பதும் மற்ற பல்கலைக் கழகங்களை போலவே தேர்வு மற்றும் நடைபெறும் காலங்கள் இருக்க வேண்டும் என்பது முக்கியமான விதியாகும்.