திருப்பதி

திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் புட்டா சுதாகர் யாதவ் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தோல்வி அடைந்து ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றார். அவர் பல துறை அதிகாரிகள் மற்றும் வாரிய தலைவர்களை தொடர்ந்து மாற்றி வருகிறார்.

ஆந்திர அரசின் கீழ் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் சுதா மூர்த்தி கடந்த வாரம் ராஜினாமா செய்தார். ஜெகன்மோகன் உறவினர் தேவஸ்தான தலைவர் பதவியில் நியமிக்கப்பட உள்ளதால் தனது பதவியை சுதா ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது. ஆனால் அதை சுதா மூர்த்தி மறுத்தார்.

இன்று திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவரான புட்டா சுதாகர் யாதவ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தில் சொந்த காரணங்களுக்காக விலகுவதாகவும் தனது ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.