லக்னோ: உத்தர பிரதேசத்தில் 1ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவமாக சீருடை வழங்கப்பட்டு வந்தது. நடப்பாண்டு கொரோனா தொற்று காரணமாக, அவை வழங்கப்படாத நிலையில் ஒவ்வொரு மாணவரின் பெற்றோர் வங்கி கணக்கில் தலா ரூ.1100 மாநில அரசு சார்பில் செலுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
உ.பி.யில் அடுத்த ஆண்டு (2022) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாக மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வரும், யோகி தலைமையிலான மாநில பாஜக அரசு தற்போது பள்ளி மாணவர்களின் யூனிபார்முக்காக பணம் கொடுத்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த சீருடை தரமற்று இருப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், இந்த ஆண்டு, மாணாக்கர்களின் சீருடை,புத்தக பை, காலணி வாங்கும் வகையில், ஒவ்வொரு மாணவரின் பெற்றோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் திட்டட்ம் தொடங்கப்பட்டு உள்ளது. அதன்படி, சுமார்1.2 கோடிக்கும் அதிகமான மாணவர்களின் பெற்றோரின் வங்கிக் கணக்கில் தலாரூ.1,100-ஐ மாநில பாஜகஅரசு செலுத்தியுள்ளது.
புதிய திட்டம் பெற்றோர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பலர் அரசின் புதிய திட்டத்தை வரவேற்கிறோம். எனினும் தொகையை உயர்த்தி வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்’ என்று கூறி வருகின்றனர்.