பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி மற்றும் நுகர்வில் உ.பி. நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. விளைபொருட்களின் ஆயுளை அதிகரிக்க லக்னோவில் காமா கதிர்வீச்சு ஆலை தொடங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 1,000 உணவு பதப்படுத்தும் அலகுகளை அமைப்பதன் மூலம் உத்தரபிரதேசம் தனது விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் விவசாயம் சார்ந்த தொழில்களை ஊக்குவிப்பதையும், மாநிலம் முழுவதும் பெரிய அளவிலான கிராமப்புற வேலைவாய்ப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நெதர்லாந்துடன் இணைந்து பாராபங்கியின் திரிவேதிகஞ்சில் ஒரு இந்தோ-டச்சு சிறப்பு மையம் நிறுவப்படவுள்ளது, இந்த மையம் மேம்பட்ட மலர் வளர்ப்பு மற்றும் காய்கறி சாகுபடி நுட்பங்கள், பயிற்சி மற்றும் ஏற்றுமதி தயார்நிலையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும். உலக சந்தைகளுடன் இணைக்க ஜேவர் விமான நிலையத்திற்கு அருகில் இந்த புதிய ஏற்றுமதி மையம் திட்டமிடப்பட்டுள்ளது.
பாரம்பரிய முறைகளை விட அறிவியல் மற்றும் அதிக வருமானம் தரும் விவசாய நடைமுறைகளை ஊக்குவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பிரதமர் காத்யா உன்னயன் யோஜனாவின் கீழ் உணவு பதப்படுத்தும் அலகுகள் அமைக்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ், அலகுகளை அமைப்பவர்களுக்கு 35 சதவீதம் வரை மானியமும், ரூ.30 லட்சம் வரை கடனும் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பெண் தொழில்முனைவோராக இருந்தால் அவரது பதப்படுத்தும் அலகுகளில் சூரிய மின்சக்தி நிறுவுவதற்கு 90% வரை மானியம் வழங்கப்படுகிறது.
இதுவரை மாநிலம் முழுவதும் சுமார் 17,000 உணவு பதப்படுத்தும் அலகுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டந்தோறும் 1000 உணவு பதப்படுத்தும் அலகுகளை அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.