சென்னை; பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ள நிதிஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார் என தகவல் கள் வெளியாகி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதிஆயோக் கூட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் புறக்கணித்து வந்தார். அது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. முதலமைச்சரின் செயல் தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட “அநீதி” என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த நிலையில், நடப்பாண்டு நடைபெறும் நிதிஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லியில் வரும் 24-ந்தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை ஏற்கிறார். இந்த கூட்டத்தில், ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நிதிஆயோக் என்பது, முன்னதாக, மத்திய திட்டக்குழு என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. இந்த மத்திய திட்டக்குழு 1950ம் ஆண்டு ம அமைக்கப்பட்டது. இந்த திட்டக்குழு அரசின் ஆண்டு திட்டங்கள். 5 ஆண்டு திட்டங்களை தீர்மானிக்கும் அமைப்பாக செயலாற்றி வந்தது. மத்தியில் கடந்த 2014ம் ஆண்டு, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பின் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக 2015ம் ஆண்டு நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார்.
நிதி ஆயோக்கின் திட்டமானது, தேசிய வளர்ச்சியில் மாநிலங்களின் தீவிர ஈடுபாடு, கூட்டாட்சியை வளர்ப்பது, அரசின் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துதல் என கூறப்படுகிறது.
நடப்பாண்டு நிதி ஆயோக்கின் கூட்டம், பிரதமர் தலைமையில் வரும் 24ந்தேதி நடைபெற உள்ளது. கடந்த 2024ம் ஆண்டு டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். ஆனால், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் கலந்துகொண்டு, தனது மாநில கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்-
இந்த நிலையில் டெல்லியில் வரும் 24-ந்தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை ஏற்கிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளும் வகையில், அவர் மே 23 அன்று டெல்லிக்குச் சென்று 24ந்தேதி நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.