லக்னோ:
டுத்த வருடம் நடைபெற இருக்கும் உ.பி. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படும் என்று ராகுல்காந்தி அறிவித்து உள்ளார்.
rahul-up
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில், தற்போது நடைபெற்று வரும் சமாஜ்வாதி கட்சி,  ஆட்சியை தக்கவைத்து கொள்ள போராடி வருகிறது.  இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க பகுஜன் சமாஜ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும்,  காங்கிரஸ் கட்சியும்  தீவிரம் காட்டி வருகின்றன.
உ.பி.,ல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக  ஷீலா தீட்சித்தை  அறிவித்து உள்ளனர்.  எப்படியும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, கிஷான் யாத்திரை என்ற பெயரில் உ.பி.முழுவதும் தீவிர  பிரசாரம் செய்து வருகிறார்.
 
இந்த பிரசாரப் பயணத்தின்போது நேற்று  ராம்பூர் மாவட்டம், மனிஹரன் கிராமத்தில்  நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசினார்.
அப்போது, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை காப்பாற்ற தவறிவிட்ட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.  விவசாயிகளுக்கு தருவதாக அறிவித்த 1.10 லட்சம் கோடி ரூபாயை பெரும் தொழிலதிபர்களுக்கு மத்திய அரசு கடனாக அளித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், உபி., சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் விவசாயக் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும், மின்கட்டணம் பாதியாக குறைக்கப்படும் எனவும் ராகுல் வாக்குறுதி அளித்தார்.