கடந்த மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்யில் பல முறைகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தீவிரவாதிகளை புரட்டி எடுத்திருக்கிறோம். ஆனால் நாட்டு நலன் கருதி ஒருபோதும் நாங்கள் ராணுவ ரகசியங்களை வெளியிட்டதில்லை. ஆனால் மோடி அரசு அரசியல் ஆதாயத்துக்காக வீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்துகிறது என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு  கண்டனம் தெரிவித்துள்ளது
randeep
காங்கிரஸ் தலைமை பேச்சாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா செய்தியாளர்களிடம் பேசும்போது, “தீவிரவாதிகளால் நமது நாட்டுக்கும், ராணுவ வீரர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்ட போதெல்லாம் காங்கிரஸ் அரசு சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறது. செப்டம்பர் 1, 2011, ஜூலை 28 , 2013 மற்றும் ஜனவரி 14, 2014 ஆகிய தினங்களில் நடைபெற்ற சர்ஜிகல் ஸ்டிரைக் ஆபரேஷன்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
ஆனால் நிறைகுடம் தளும்பாது என்ற வார்த்தைக்கேட்ப நாட்டு நலன் மற்றும் மக்களின் பாதுகாப்பு கருதி இதை நாங்கள் வெளியிட்டதில்லை. ஆனால் மோடி அரசோ வரவிருக்கும் உ.பி, உத்தர்காண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் போன்ற மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து அரசியல் ஆதாயம் தேடும் மலிவான அரசியலில் ஈடுபடுகிறது என்று குற்றம் சாட்டினார்.