லக்னோ:

உ.பி. சட்டமன்றத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து  உ.பி. சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை  காலை 7 மணிக்கு தொடங்கியது/

முதல்கட்டமாக 73 தொகுதிகளுக்கு ஏற்கனவே வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இன்று 2வது கட்டமாக 67 தொகுதி களில்  வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

காலையிலேயே மக்களும் கூட்டம் கூட்டமாக வாக்குச்சாவடியை நோக்கி சென்று கொண்டுள்ளனர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், வரிசையில் நின்று ஓட்டளித்து வருகின்றனர்.

உ.பியில் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் இன்று  2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற இந்த 67  தொகுதிகளில், சமாஜ்வாதி 34 இடங்களையும், பகுஜன் சமாஜ் 18 இடங்களும், பாரதியஜனதா 10 இடங்களும், காங்கிரஸ் 3 இடங்களும், மற்றவை 2 இடங்களையும் கைப்பற்றி இருந்தது.

உத்தர பிரதேசத்தில் இந்த முறை மும்முனை போட்டி நடக்கிறது. ஆட்சியை பிடிப்பது யார் என கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனால், தற்போது காங்கிரஸ் சமாஜ்வாதி கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திப்பதால் அகில இடங்களை இந்த கூட்டணி பிடிக்கும் என நம்பப்படுகிறது.