சென்னை: கோடை விடுமுறை மற்றும் வாக்களிக்க சென்றவர்கள் திரும்பும் வகையிலும,  பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு மெமு (MEMU) ரயில்கள் இயக்கப்படுவதாக  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோடை விடுமுறை மற்றும் பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு மெமு (MEMU) ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இது குறித்த வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூர் மற்றும் திருநெல்வேலி இடையே ஒருமுறை மட்டும் இயக்கப்படும் வகையில் இந்த சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் அனைத்தும் 12 பெட்டிகளைக் கொண்ட மெமு வகை ரயில்களாகவும், முற்றிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளாகவும் இயக்கப்படும்.

வண்டி எண் 06161: சென்னை எழும்பூர் – திருநெல்வேலி

சென்னை எழும்பூரிலிருந்து ஏப்ரல் 25-ம் தேதி சனிக்கிழமை இரவு 11.50 மணிக்குப் புறப்படும் இந்த ரயிலானது, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10.45 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும்.

இந்த ரயில் தாம்பரம் (00.30/00.32), செங்கல்பட்டு (01.00/01.02), விழுப்புரம் (02.40/02.45), விருத்தாச்சலம் (03.30/03.32), அரியலூர் (04.13/04.15), ஸ்ரீரங்கம் (04.58/05.00), திருச்சி (05.35/05.40), திண்டுக்கல் (06.38/06.40), கொடைக்கானல் ரோடு (06.56/06.58), மதுரை (07.55/08.05), விருதுநகர் (08.38/08.40), சாத்தூர் (08.58/09.00) மற்றும் கோவில்பட்டி (09.18/09.20) ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

வண்டி எண் 06162: திருநெல்வேலி – தாம்பரம்

மறுமார்க்கமாக, திருநெல்வேலியிலிருந்து ஏப்ரல் 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 01.20 மணிக்குப் புறப்படும் இந்த ரயிலானது, அதே நாள் இரவு 11.45 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயில் கோவில்பட்டி (14.28/14.30), சாத்தூர் (14.46/14.48), விருதுநகர் (15.13/15.15), மதுரை (15.50/16.00), கொடைக்கானல் ரோடு (16.33/16.35), திண்டுக்கல் (17.00/17.02), திருச்சி (18.25/18.30), ஸ்ரீரங்கம் (18.50/18.52), அரியலூர் (19.32/19.34), விருத்தாச்சலம் (20.06/20.08), விழுப்புரம் (21.10/21.15) மற்றும் செங்கல்பட்டு (22.38/22.40) ஆகிய நிலையங்களில் நின்று தாம்பரம் அடையும்.

கோடை விடுமுறை முடிந்து ஊர் திரும்புவோருக்கும், வார இறுதி நாட்களில் சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்கும் இந்த முன்பதிவு இல்லாத மெமு ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]