சென்னை

ன்று மாலை சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த அண்டு செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை மற்றும் எம்.சி.ஏ, எம்.பி.ஏ பட்டப்படிப்பிற்கான 2023 ஜூன் மாத செமஸ்டர் தேர்வு, நடைபெற்றது.

தொலைதூர கல்வி நிறுவனத்தில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர்.

இதற்கான முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாலை 6 மணிக்கு www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் தேர்வர்கள் தங்களின் தேர்வெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை அறியலாம் என்று தெரிவித்துள்ளது.