உத்தர பிரதேஷ், மணிப்பூர், உத்தரகண்ட், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 2022 ம் ஆண்டு நடைபெற இருக்கிறது.

இந்த தேர்தல் குறித்த அறிவிப்பு ஜனவரி முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்று அரசியல் கட்சிகளிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், இந்த ஐந்து மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடு, தடுப்பூசி வழங்கப்பட்டதற்கான புள்ளிவிவரம் மற்றும் ஓமைக்ரான் பரவல் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது.

தேர்தல் ஆணையத்திடம் இந்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் சமர்பித்துள்ளது. ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் அடுத்து வரும் மாதங்களில் இது மேலும் 25 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் இந்த அறிக்கையைத் தொடர்ந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாளை உத்தர பிரதேசம் சென்று தேர்தல் ஆயத்தப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய இருக்கின்றனர்.