இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை நீக்க வகை செய்யும் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கடந்த டிசம்பரில் வெளியிட்டது.
இடஒதுக்கீட்டின் கீழ் போதுமான விண்ணப்பங்கள் பெறப்படாத பட்சத்தில் அந்த இடங்களை பொதுப்பிரிவின் கீழ் நிரப்ப வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஜனவரி 28க்குள் பொதுமக்களின் கருத்தை தெரிவிக்குமாறு அறிவுறுத்தியிருந்தது.
இந்த புதிய விதிமுறையால் SC, ST மற்றும் OBC பிரிவில் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவில்லை என்று கூறி பொதுப்பிரிவினரை பணியில் அமர்த்தவும் இடஒதுக்கீட்டு முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கிலும் UGC செயல்படுவதாக புகார் எழுந்தது.
மேலும், இந்த புதிய வழிகாட்டுதல்களுக்கு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் எஸ்சி/எஸ்டி ஆசிரியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த எதிர்ப்பை அடுத்து இந்த வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய கல்வி அமைச்சகம் மறுத்துள்ளது.
இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை நீக்க வகை செய்யும் வழிகாட்டு நெறிகளை வெளியிட்டது UGC