2024 நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கியது.

சல்மான் குர்ஷித் தலைமையிலான காங்கிரஸ் குழுவுடன் திமுக – காங்கிரஸ் இடையிலான இந்த தொகுதி பங்கீடு குறித்து டி.ஆர்.பாலு தலைமையிலான குழு இன்று பேச்சுவார்த்தை நடத்தியது.

இதில் தங்கள் கட்சி போட்டியிட விரும்பும் 21 தொகுதிகளின் பட்டியலை காங்கிரஸ் கட்சி திமுக-விடம் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மற்ற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு எந்த கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது எந்தெந்த தொகுதிகள் என்ற விவரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சல்மான் குர்ஷித் தங்கள் கூட்டணி பலமாக உள்ளதாகவும் பேச்சுவார்த்தை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.