டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்தியஅமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கொரேனா பரவல், மருந்துகள் பற்றாக்குறை, தடுப்பூசி உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை அசூர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நோயாளிகளின் அதிகத்து வருகின்றனர். நோயால் பாதிக்கப்பட்டவா்களின் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ வசதிகள் கிடைப்பதில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியமாக தேவைப்படும் ரெம்டெசிவிா் மருந்து, மருத்துவ ஆக்சிஜன் ஆகியவற்றுக்கு பல மாநிலங்களில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதை போக்க மத்திய மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுத்தாலும் சில மாநிலங்களில் பற்றாக்குறை தொடர்கறிது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், இன்று பிரதமா் தலைமையில் மத்திய அமைச்சா்கள் குழு கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற உள்ளது. கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை பரவலுக்குப் பிறகு நடைபெறும் முதல் மத்திய அமைச்சா்கள் குழு கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.