டில்லி

த்திய அமைச்சரவை ஜம்மு காஷ்மிர் விவகாரத்துக்கு 7 நிமிடங்களில் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை அன்று பாஜக அரசு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண்கள் 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை விலக்க மசோதா தாக்கல் செய்தது. அத்துடன் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை  தனித்தனி யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க உள்ளதாக அறிவித்தது. லடாக் மத்திய அரசின் நேரடி ஆட்சியில் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் சிலரைத்  தவிர மற்றவர்களுக்குத் தெரிவிக்கப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இந்த மசோதா   மாநிலங்களவையில் தாக்கல் செய்த போதும் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அளித்த போதும் கூட அதிகம் பேர் இதில் ஈடுபட ஆரம்பித்தனர். மாநிலங்களவையில் ஆளும் பாஜகவுக்குத் தனிப் பெரும்பான்மை இல்லாததால் எதிர்க்கட்சிகளை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வைக்க பாஜக தேவையான நடவடிக்கையை எடுத்தது.

அதற்கு முன்பு இந்த மசோதாவை மத்திய அமைச்சரவை முன்பு தாக்கல் செய்த  போது தான் பல அமைச்சர்களுக்கு இது குறித்துத் தெரிய வந்துள்ளது. விதி எண் 370 மற்றும் 35 ஏ நீக்கம். ஜம்மு, காஷ்மீர் மாநிலம் பிரிப்பு ஆகியவற்றுக்கு அமைச்சரவை ஏழே  நிமிடங்களில் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அதன் பிறகு இந்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த பிறகு அனைவருக்கும் இது குறித்துத் தெரிந்தது.